Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தேர்தலை ஏப்ரல் 2021-க்குப் பிறகு நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது:மூத்த அமைச்சர் தியோ

பொதுத்தேர்தலை அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குப் பிறகு நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது என்று மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென் கூறியிருக்கிறார்.  

வாசிப்புநேரம் -
தேர்தலை ஏப்ரல் 2021-க்குப் பிறகு நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது:மூத்த அமைச்சர் தியோ

(கோப்புப் படம்: CNA)

பொதுத்தேர்தலை அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குப் பிறகு நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது என்று மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென் கூறியிருக்கிறார்.

நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டாலொழிய அது சாத்தியமில்லை என்றார் அவர்.

நாடாளுமன்றத்தில் பேசியபோது திரு தியோ அவ்வாறு சொன்னார்.

ஹாலந்து புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டோஃபர் டிசோஸா எழுப்பிய கேள்விக்குத் திரு தியோ பதிலளித்தார்.

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சித் தலைவர் டான் செங் போக் போன்றவர்கள் தற்காலிக அரசாங்கத்தை அமைத்து, கொரோனா கிருமிப்பரவல் நெருக்கடி முடிவுக்கு வந்தபிறகு தேர்தலை நடத்தலாம் என்று அழைப்பு விடுத்திருந்ததைத் திரு டிசோஸா சுட்டினார்.

தற்போதைய அரசாங்கத்தின் தவணைக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி முடிவுக்குவரவேண்டும். அதனையடுத்து, 3 மாதங்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும்.

பிரதமர் லீ சியென் லூங், பொதுத் தேர்தலுக்கான நாளை இன்னும் முடிவு செய்யவில்லை என்றார் அவர்.

சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரர்களுக்கும் எது சிறந்ததோ அதைக் கருத்திற்கொண்டு முடிவெடுக்கப்படும் என்றார் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு தியோ.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்