Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் ஆயுதப்படை, தற்காப்பு அமைச்சு இணையம்வழி நடத்திய சிங்கப்பூரின் 55ஆவது தேசிய தினப் பற்றுறுதிச் சடங்கு

தேசிய தினத்தை முன்னிட்டு, இன்று காலை தற்காப்பு அமைச்சு நடத்திய பற்றுறுதிச் சடங்கில் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் (Dr Ng Eng Hen) கலந்துகொண்டார்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் ஆயுதப்படை, தற்காப்பு அமைச்சு இணையம்வழி நடத்திய சிங்கப்பூரின் 55ஆவது தேசிய தினப் பற்றுறுதிச் சடங்கு

(காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: www.mindef.gov.sg)

தேசிய தினத்தை முன்னிட்டு, இன்று காலை தற்காப்பு அமைச்சு நடத்திய பற்றுறுதிச் சடங்கில் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் (Dr Ng Eng Hen) கலந்துகொண்டார்.

இணையம்வழி நடந்த அந்த நிகழ்ச்சியில் தற்காப்பு அமைச்சையும் சிங்கப்பூர் ஆயுதப் படையையும் சேர்ந்த சுமார் 3000 அதிகாரிகள், அவரவர் அலுவலத்திலிருந்தும் இல்லத்திலிருந்தும் கலந்துகொண்டனர்.

தேசிய கீதம் பாடிப் பற்றுறுதி எடுத்துக்கொள்ளும் சடங்கை வழி நடத்தினார் டாக்டர் இங்.

So Drama! நிறுவனத்தின் இசை, நாடகக் கலைஞர்களின் ஆடல், பாடல் நாடகம் போன்றவை அந்த விழாவின் ஓர் அம்சமாக இடம்பெற்றன.

அது முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பானது.

தற்காப்புக்கான மூத்த துணை அமைச்சர்கள் திரு. ஹெங் சீ ஹாவ், திரு. ஸாக்கி முகமது உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தேசிய தினத்தை முன்னிட்டு, சிங்கப்பூர் ஆயுதப் படையின் எல்லாப் பிரிவுகளும் பற்றுறுதிச் சடங்கை ஏற்று நடத்தும்.                  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்