Images
  • 21Mar Sg MINDS (1)

சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளின் பராமரிப்பாளர்களுக்குப் புதிய பராமரிப்பு நிலையம் திறப்பு

சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளின் பராமரிப்பாளர்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கும் நோக்கில் புதிய பராமரிப்பு நிலையம் திறக்கப்படவுள்ளது.

பள்ளி நேரத்திற்கு முன்பும் பின்பும் அது பராமரிப்புச் சேவை வழங்கும்.

MINDS உட்லண்ட்ஸ் கார்டன்ஸ் பள்ளியின் 50ஆம் ஆண்டு நிறைவில் அது பற்றி அறிவிக்கப்பட்டது.

தற்போதுள்ள சிறப்புத் தேவையுள்ளோருக்கான MINDS பள்ளிகள் நான்கில் ஒன்றில் பராமரிப்புச் சேவை நிலையம் அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

அங்கு 50 மாணவர்களுக்குச் சேவைகளை வழங்க முடியும்.
அதற்கான மாதாந்தரக் கட்டணம் 800 வெள்ளி.

ஆனால், குடும்ப வருமானத்தைப் பொறுத்துக் கட்டணச் சலுகைகள் வழங்கப்படும்.

இதுவரை சுமார் 20 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகக் கூறிய MINDS, மற்ற பள்ளிகளுக்கும் அந்தச் சேவையை விரிவுபடுத்தும் திட்டம் உள்ளதாய்த் தெரிவித்தது.

அடுத்த ஆண்டு ஜனவரியில் புதிய நிலையம் திறக்கப்படும்.
அது குறித்த விரிவான தகவல்கள் இன்றிரவு எட்டரை மணித் தொலைக்காட்சிச் செய்தியில் இடம்பெறுகின்றன. 

Top