Images
  • Iswaran (1)

சட்டத்துறை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் மேம்பட்ட சேவையை வழங்கலாம் : அமைச்சர் ஈஸ்வரன்

சட்டத் துறை, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், சட்டச் சேவையை நாடுவோர் அதனை மேம்பட்ட முறையில் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தகவல், தொடர்பு அமைச்சர் எஸ். ஈஸ்வரன் கூறியிருக்கிறார்.

சர்ச்சைகளுக்கு மேலும் விரைவாகத் தீர்வுகாண முடியும் என்றும், விளைவுகள் மேலும் நிலையாக இருக்கும் என்றும் அவர் சொன்னார்.

சட்டத்துறைக்கான தொழில்நுட்பப் பயன்பாடு பற்றிய நிகழ்ச்சியில் அமைச்சர் ஈஸ்வரன் உரையாற்றினார்.

சட்டக் கழகமும் அரசாங்கமும் அண்மையில் Tech-celerate for Law எனும் திட்டத்தை அறிமுகம் செய்தன.

சட்டச் சேவை நிறுவனங்கள் தொழில்நுட்பத்தைத் தழுவுவதற்கு ஊக்குவிக்கும் 3.68 மில்லியன் வெள்ளி திட்டம் அது.

அதன்கீழ், சிங்கப்பூர் சட்டத்துறையினர் மின்னிலக்க வளங்களை நாட, 70 விழுக்காடுவரை நிதி ஆதரவு வழங்கப்படும்.

அந்தத் துறையினர் தங்கள் ஆற்றலையும் உலகளாவிய போட்டித்தன்மையையும் மேம்படுத்திக்கொள்ள, தொழில்நுட்பத் தீர்வுகள் உதவும் என்றார் அமைச்சர் ஈஸ்வரன்.

Top