Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'செயற்கை நுண்ணறிவில் (Artificial Intelligence) உலக அளவில் புத்தாக்கத்துக்கான இடமாக சிங்கப்பூர் திகழ வேண்டும்'

செயற்கை நுண்ணறிவுத் (Artificial Intelligence) தொழில்நுட்பத்தில் உலக அளவில் புத்தாக்கத்துக்கான இடமாக சிங்கப்பூர் திகழ வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் விருப்பம் தெரிவித்திருக்கிறார். 

வாசிப்புநேரம் -
'செயற்கை நுண்ணறிவில் (Artificial Intelligence) உலக அளவில் புத்தாக்கத்துக்கான இடமாக சிங்கப்பூர் திகழ வேண்டும்'

படம்: Cheryl Lin

செயற்கை நுண்ணறிவுத் (Artificial Intelligence) தொழில்நுட்பத்தில் உலக அளவில் புத்தாக்கத்துக்கான இடமாக சிங்கப்பூர் திகழ வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்த, சிங்கப்பூர் அதன் விதிமுறைகளையும், கட்டமைப்பையும் சார்ந்திருக்கவேண்டும்.
சிங்கப்பூரின் விதிமுறைகள் விரைவாக இயங்கக்கூடியவை, அதன் கட்டமைப்பு உறுதியானவை என்பதையும் டாக்டர் பாலகிருஷ்ணன் சுட்டினார்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்கான முக்கிய இடமாக சிங்கப்பூர் திகழ விரும்புகிறது என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரின் 'Smart Nation' எனப்படும் 'அறிவார்ந்த தேசம்' திட்டத்துக்கு டாக்டர் பாலகிருஷ்ணன் பொறுப்பு வகிக்கிறார்.

ஸ்பெயினின் பார்சலோனா நகரில் நடைபெற்று வரும் 'Smart City Expo' உலக மாநாட்டில் அமைச்சர் பேசினார்.

சிங்கப்பூர் மின்னிலக்கத் திறன்கொண்ட மக்களைக் கொண்டிருக்கிறது; தலைசிறந்த மின்னிலக்கக் உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது; இவை சிங்கப்பூருக்குக் கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்றார் அவர்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்