Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

IKEA கடைகளில் தவறுதலாக அச்சடிக்கப்பட்ட வார்த்தைகளுடன் விற்கப்படும் 'சிறப்புப்' பைகள்

சிங்கப்பூர் IKEA கடைகளில் தவறுதலாக அச்சடிக்கப்பட்ட வாரத்தைகளுடன் விற்கப்படுகின்றன சில 'சிறப்புப்' பைகள்!

வாசிப்புநேரம் -
IKEA கடைகளில் தவறுதலாக அச்சடிக்கப்பட்ட வார்த்தைகளுடன் விற்கப்படும் 'சிறப்புப்' பைகள்

(படம்: IKEA SINGAPORE online store/CNA)

சிங்கப்பூர் IKEA கடைகளில் தவறுதலாக அச்சடிக்கப்பட்ட வாரத்தைகளுடன் விற்கப்படுகின்றன சில 'சிறப்புப்' பைகள்!

ஆம், KLAMBY பைகள் எனும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளில் அச்சடிக்கப்பட்ட வார்த்தைகளில் தவறு நேர்ந்துள்ளது.

இருப்பினும், அவற்றைச் 'சிறப்புப்' பைகள் என்று அழைத்து, குறைந்த விலையில் விற்று வருகிறது IKEA!

நிறுவனத்தின் வித்தியாசமான அணுகுமுறை மற்றவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பைகளில் நிறுவனத்தின் முத்திரையும், அதன் இணையவாசல் முகவரியும் இடம்பெறவேண்டியது.

இருப்பினும், 'www.ikea.com.sg' என்று அச்சடிக்கப்படுவதற்கு பதிலாக 'www.ikea.co.sg' என்று தவறுதலாக அச்சடிக்கப்பட்டுவிட்டது.

தவறு நேர்ந்ததை அறிந்தவுடன், நிறுவனங்கள் வழக்கமாகப் பைகளை வீசுவதுண்டு.

ஆனால் பைகள் IKEA கடைகளிலும் இணையவாசலிலும் தொடர்ந்து விற்கப்பட்டுவருகின்றன.

தவறு செய்தாலும் பரவாயில்லை.KLAMBY பைகள் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை என்பதால், நாங்கள் அவற்றை அப்புறப்படுத்தப் போவதில்லை. அவை 'சிறப்புப் பைகள்'..அவை கடைகளில் மீண்டும் விற்பனைக்கு வரப்போவதில்லை.

என்று கடைகளின் தகவல் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்