Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

2019 நல்லாசிரியர் விருதுக்கான நியமனங்கள் வரவேற்கப்படுகின்றன!

கல்வி அமைச்சு இந்த ஆண்டின் நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

கல்வி அமைச்சு இந்த ஆண்டின் நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும், தங்களுக்கு மிகவும் ஊக்கமளித்த தமிழாசிரியர்களை அந்த விருதுக்கு முன்மொழியலாம்.

தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி, புகுமுகக் கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தமிழாசிரியர்களை அவர்கள் பரிந்துரைக்கலாம்.

தமிழ் முரசு நாளிதழ், தமிழ் மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழு, சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் ஆகியவை இணைந்து அந்த விருதை வழங்குகின்றன.

தமிழ் கற்றல், கற்பித்தலில் மாணவர்களின் மொழி ஆர்வத்தைத் தூண்ட, குறிப்பிடத்தக்க வகையில் பணியாற்றிய தமிழாசிரியர்களை அங்கீகரிக்கும் வண்ணம், 2002ஆம் ஆண்டிலிருந்து நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு, அவர்கள் வாழ்வில் நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்திய ஆசிரியர்கள் கௌரவிக்கப்படுகின்றனர்.

இன்று முதல் அடுத்த மாதம் 30ஆம் தேதி வரை அதற்கு விண்ணப்பிக்கலாம்.

சிங்கப்பூர் பள்ளிகள் அனைத்திலும் விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கும்.

இணையம் வழி விண்ணப்பிக்க, தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழு, தமிழ் முரசு ஆகியவற்றின் இணையத் தளங்களை நாடலாம்.

விண்ணப்ப படிவத்தை www.tllpc.sg அல்லது www.tamilmurasu.com.sg என்ற இணையத்தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

அல்லது, இணையம் வழி, http://tinyurl.com/MITT-TAMIL2019 மற்றும் http://tinyurl.com/MITT-ENGLISH2019 ஆகிய இணையப்பக்களில் நியமிக்கலாம்.

2002ஆம் ஆண்டிலிருந்து இதுவரை சுமார் 190 தமிழாசிரியர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

வரும் ஆகஸ்ட் மாதத்தில், நல்லாசிரியர் விருதுகளுடன், சிறந்த பயிற்சி ஆசிரியர் விருதும், வாழ்நாள் சாதனை விருதும் வழங்கப்படவிருக்கின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்