Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஹாங்காங் ஆர்ப்பாட்டங்களால் சிங்கப்பூரர்களுக்குப் பாதிப்பில்லை: வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்

ஹாங்காங்கில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களால் சிங்கப்பூரர்கள் யாரும் பாதிப்படைந்ததாகவோ, காயமடைந்ததாகவோ சிங்கப்பூர் அரசாங்கத்துக்குத் தகவல் இல்லை என வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
ஹாங்காங் ஆர்ப்பாட்டங்களால் சிங்கப்பூரர்களுக்குப் பாதிப்பில்லை: வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்

(படம்: Reuters)

ஹாங்காங்கில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களால் சிங்கப்பூரர்கள் யாரும் பாதிப்படைந்ததாகவோ, காயமடைந்ததாகவோ சிங்கப்பூர் அரசாங்கத்துக்குத் தகவல் இல்லை என வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்க்குமாறு சிங்கப்பூரர்களுக்கு வெளியுறவு அமைச்சு ஆலோசனை கூறியிருக்கிறது.

ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற்றாலும் அவை வெகுவிரைவில் வன்முறை மிக்கவையாக மாறலாம் என்பதை சிங்கப்பூரர்கள் அறிந்திருக்கவேண்டும் என்றார் டாக்டர் பாலகிருஷ்ணன்.

ஹாங்காங்கில் இருக்கும் சிங்கப்பூரர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து விழிப்புநிலையில் இருக்குமாறும், உள்ளூர் சட்டங்களை மதித்து நடக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

உள்ளூர் ஊடங்கள் மூலமும் , ஹாங்காங்கில் உள்ள சிங்கப்பூர்த் துணைத் தூதரகம் மூலமும் அண்மை நிலவரங்கள் குறித்து தகவல் பெற்றுக்கொள்ளுமாறும் சிங்கப்பூரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்