Images
  • worker's party
    படம்: TODAY

அல்ஜூனிட் - ஹவ்காங் நகர மன்ற வழக்கு: KPMG நிறுவனத்தின் புரிதல் பற்றிக் கேள்வி

அல்ஜூனிட் - ஹவ்காங் நகர மன்ற வழக்கில், KPMG நிறுவனத்தின் புரிதல் பற்றித் தற்காப்புத் தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

அதிகார மாற்றம், நகர மன்றங்களின் கட்டுப்பாட்டு நடைமுறை ஆகியன பற்றி KPMG நிறுவனம் என்ன புரிந்து கொண்டது என்பது பற்றித் தற்காப்புத் தரப்பு கேள்வி எழுப்பியது.

 பாட்டாளிக் கட்சியின் மூன்று தலைவர்கள், இரண்டு நகரமன்றங்களின் உறுப்பினர்கள் ஆகியோரைத் தற்காப்புத் தரப்பு பிரதிநிதிக்கிறது.

அல்ஜூனிட் - ஹவ்காங், பாசிர் ரிஸ் - பொங்கோல் நகர மன்றங்களின் சார்பில் நியமிக்கப்பட்ட சுயேச்சைக் குழு அந்த வழக்கைத் தொடுத்துள்ளது.

அல்ஜூனிட் - ஹவ்காங் நகர மன்றம் நிர்வாக முகவரை அமர்த்துவதற்கான ஏலக் குத்தகைக்கு அழைப்பு விடுக்காமல் இருந்ததை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது என்று தற்காப்புத் தரப்புத் தெரிவித்தது.

அதற்கு விலக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அது முறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றும் தற்காப்புத் தரப்பு கூறியது.

ஏலக் குத்தகைக்கு விலக்கு அளிக்கப்பட்டதை நியாயப்படுத்த முடியாது என்று KPMG நிறுவனம் வாதிட்டது.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் தற்காப்புத் தரப்பு இன்று தனது வாதத்தை முன்வைத்தது.

தேசிய வளர்ச்சி அமைச்சும், அப்போதைய அமைச்சர் காவ் பூன் வானும் 2013ஆம் ஆண்டு ஏலக்குத்தகைக்கு விலக்கு அளிக்கப்பட்டதன் தொடர்பில் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை என்பதையும் தற்காப்புத் தரப்புச் சுட்டியது.


Top