Images

தேசிய தினக் கொண்டாட்டம்: தீவின் பெரும்பாலான பேட்டைகளில் வலம் வரவிருக்கும் கவச வாகனங்கள்

தேசிய தின அணிவகுப்பில் முக்கிய அங்கம் வகிக்கும் கவச வாகனங்கள் இம்முறை தீவின் பெரும்பாலான பேட்டைகளில் வலம் வரவிருக்கின்றன.

அதிகமானோரைச் சென்றடையவேண்டும்என்பதற்காக கவச வாகனங்களின் அணிவகுப்புக்காக ஐந்து பாதைகளை ஏற்பாட்டுக் குழுவினர் வகுத்துள்ளனர்.

பல்வேறு புதிய அம்சங்களையும் அணிவகுப்பில் எதிர்பார்க்கலாம்.

அனைவரின் கவனத்தையும் வசப்படுத்தத் தவறாத கவச வாகன அணிவகுப்பில் இம்முறை 66 வாகனங்கள் இடம்பெறுகின்றன.

அவற்றுள், காவல்துறையின் Next Generation Fast Response car எனும்^ இந்தப் புதிய வாகனத்தையும் குடியிருப்பாளர்கள் பார்த்து மகிழலாம்.

அனைத்துக் குடியிருப்புப் பேட்டைகளுக்கும் முடிந்தவரை செல்ல மேற்குப் பாதை, தெற்குப் பாதை, வடக்குப் பாதை, தென்கிழக்குப் பாதை, வடகிழக்குப் பாதை என்ற ஐந்து பாதைகள் வகுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பாதையிலும் கிட்டத்தட்ட 13 வாகனங்களில் சுமார் 60லிருந்து 70 பங்கேற்பாளர்கள் வலம் வருவர்.

COVID-19 காரணமாக இக்கட்டான சூழலை எதிர்கொண்டுவரும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு மரியாதை செலுத்துவது அணிவகுப்பின் சிறப்பு அம்சங்களில் ஒன்று.

Top