Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆசிரியர்களின் நிபுணத்துவ நடத்தை தொடர்ந்து வலியுறுத்தப்படும்-கல்வி அமைச்சு

ஆசிரியர்கள் மாணவர்களுடன் கலந்துறவாடும்போது அவர்கள் மீது வைக்கப்படும் நம்பிக்கைக்கு ஏற்றாற்போல் நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதாகக் கல்வியமைச்சு வலியுறுத்திவுள்ளது.

வாசிப்புநேரம் -
ஆசிரியர்களின் நிபுணத்துவ நடத்தை தொடர்ந்து வலியுறுத்தப்படும்-கல்வி அமைச்சு

கோப்புப் படம்: CNA

ஆசிரியர்கள் மாணவர்களுடன் கலந்துறவாடும்போது அவர்கள் மீது வைக்கப்படும் நம்பிக்கைக்கு ஏற்றாற்போல் நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதாகக் கல்வியமைச்சு வலியுறுத்திவுள்ளது.

அண்மை மாதங்களில் நிகழ்ந்த தொடர் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களைத் தொடர்ந்து அமைச்சு அவ்வாறு கூறியது.

CNA விடுத்த கேள்விகளுக்குப் பதிலளித்தபோது அமைச்சின் துணைத் தலைமை இயக்குநர் லியூ வெ லி (Liew Wei Li) அந்தக் கருத்தை வெளியிட்டார்.

கல்வியாளர்களின் பணிக்காலம் முழுதும் அவர்கள் மீது உள்ள உயர்வான எதிர்பார்ப்புகளை அமைச்சு தொடர்ந்து வலியுறுத்துவதாக அவர் கூறினார்.

கல்வியாளர்களுக்கான நிபுணத்துவ நடத்தைக் கோட்பாடு பற்றிப் பள்ளித் தலைவர்களும் ஆசிரியர்களிடம் தொடர்ந்து எடுத்துக் கூறுவதாகத் திருவாட்டி லியூ தெரிவித்தார்.

ஆசிரியர்களைத் தெரிவுசெய்தல், அவர்களுக்குப் பயிற்சி வழங்குதல் போன்றவற்றில் அமைச்சு சிறந்த முயற்சிகளை எடுத்துவந்தாலும் தவறான நடத்தையில் ஈடுபடும் சிலர் இருக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாணவர்களுக்குப் பாதுகாப்பற்ற சம்பவங்கள் ஏதும் நடந்தால், அதுகுறித்துப் பள்ளி நிர்வாகத்திடம் மாணவர்கள் புகார் செய்ய சில முறைகள் இருப்பதாகவும் அவர்களுக்கு ஆதரவு வழங்கப் பள்ளி ஆலோசகர்கள் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

மாணவர்களுடன் தகாத உறவை வைத்துக்கொண்டதற்காக அண்மை மாதங்களில் சில ஆசிரியர்களுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்