Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளில் அடுத்த ஆண்டு சேர - பிப்ரவரி 5ஆம் தேதியிலிருந்து இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

அடுத்த ஆண்டு கல்வி அமைச்சின் (MOE) பாலர் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க, வரும் பிப்ரவரி 5ஆம் தேதியிலிருந்து இணையம் மூலம் பதிவு செய்யவேண்டும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளில் அடுத்த ஆண்டு சேர - பிப்ரவரி 5ஆம் தேதியிலிருந்து இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

(கோப்புப் படம்: Facebook/Ministry of Education, Singapore)

அடுத்த ஆண்டு கல்வி அமைச்சின் (MOE) பாலர் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க, வரும் பிப்ரவரி 5ஆம் தேதியிலிருந்து இணையம் மூலம் பதிவு செய்யவேண்டும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இணையப் பதிவு 5 நாட்களுக்கு நடைபெறும். அடுத்த மாதம் 5 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிப்ரவரி 9 ஆம் தேதி மாலை 4 மணி வரை பதிவுசெய்யலாம்.

பெற்றோருக்கு மார்ச் 31ஆம் தேதிக்குள் பதிவுகளின் முடிவு குறித்துத் தெரிவிக்கப்படும்.

கல்வி அமைச்சின் 43 பாலர் பள்ளிகளுக்கான பதிவுகள் இடம்பெறும்.

2017ஆம் ஆண்டு ஜனவரி 2-க்கும் 2018ஆம் ஆண்டு ஜனவரி 1க்கும் இடைப்பட்ட தேதிகளில் பிறந்த சிங்கப்பூர்க் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் பதிவு செய்யலாம்.

கிருமிப்பரவல் சூழலால் முன்னைய ஆண்டுகளைப் போன்று நேரடியாகப் பாலர் பள்ளிகளுக்குச் சென்று பதிவு செய்யமுடியாது.

அதற்குப் பதிலாக மெய்நிகர் முறையில் விளக்கக்கூட்டம் (open house) நடத்தப்படும்.

இம்மாதம் 30 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அது Zoomஇல் நடைபெறும்.

பள்ளிகளின் பாடத்திட்டம் பற்றி அதில் விளக்கப்படும்.

பெற்றோர் தங்கள் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளவும் வாய்ப்பளிக்கப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்