Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தேசிய அளவிலான பள்ளி விளையாட்டுகள் தற்காலிக நிறுத்தம் - கல்வி நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு

தேசிய அளவிலான பள்ளி விளையாட்டுகள் தற்காலிக நிறுத்தம் - கல்வி நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு

வாசிப்புநேரம் -
தேசிய அளவிலான பள்ளி விளையாட்டுகள் தற்காலிக நிறுத்தம் - கல்வி நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு

(படம்: Ngau Kai Yan/ CNA)

பள்ளிகளிலும் உயர் கல்வி நிலையங்களிலும் COVID-19 நோய்ப்பரவலுக்கு எதிராகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

பாலர் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், சிறப்புத் தேவையுடையோருக்கான பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள், மில்லேனியா (Millennia) கல்விக்
கழகம் ஆகியவற்றில் உள்ள தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும் என்று அமைச்சு கூறியது.

*மாணவர்கள் மற்ற வகுப்பு மாணவர்களுடன் ஒன்றுகூடுவது, வெளிப்புற நடவடிக்கைளில் ஈடுபடுவது போன்றவை குறைக்கப்படும்.

*ஒரு குழுவில் 5 பேர் தான் இருக்க வேண்டும்.

*எல்லா நடவடிக்கைகளிலும், விரிவுரைகள் உட்பட ஒட்டுமொத்தமாக 50 பேர் தான் இருக்க வேண்டும்.

*வெளிப்புறக் கற்றல் நடவடிக்கைகளும் நிறுத்தப்படும்.

தற்போது நடந்து வரும் தேசிய அளவிலான பள்ளி விளையாட்டுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

மாணவர்கள், ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்புக் கருதி அந்த நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அமைச்சு கூறியது.

2021ஆம் ஆண்டிற்கான நேரடிப் பள்ளிச் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் நாளை தொடங்கும். தெரிவு நடைமுறை மின்னிலக்க ரீதியாக இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வரும் 8ஆம் தேதியிலிருந்து நடப்பிற்கு வரும் புது நடவடிக்கைகளையொட்டி கல்வியமைச்சு அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்