Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மாணவர்களின் பலதரப்பட்ட சாதனைகளை அங்கீகரிக்கும் சிறப்பு விருதுகள்

சிங்கப்பூரின் 81 கல்வி நிலையங்களைச் சேர்ந்த 201 மாணவர்களுக்கு இந்த ஆண்டின் சிறப்பு விருதுகளைக் கல்வி அமைச்சு வழங்கவிருக்கிறது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் 81 கல்வி நிலையங்களைச் சேர்ந்த 201 மாணவர்களுக்கு இந்த ஆண்டின் சிறப்பு விருதுகளைக் கல்வி அமைச்சு வழங்கவிருக்கிறது.

இதுவரை வழங்கப்பட்ட விருதுகளில் இதுவே ஆக அதிகமான எண்ணிக்கை.

கல்வி சார்ந்த நடவடிக்கைகள், அதற்கு அப்பாற்பட்ட சமூகப் பங்களிப்புகள் எனப் பலதரப்பட்ட சாதனைகளுக்காக அந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

கிருமிப் பரவல் சூழலை முன்னிட்டு இந்த ஆண்டில் விருது வழங்கும் நிகழ்ச்சி இடம்பெறாது. இருப்பினும் பள்ளிகளும், உயர் கல்வி நிலையங்களும் சிறிய அளவிலான நிகழ்ச்சிகளுக்கோ, இணைய நிகழ்ச்சிகளுக்கோ ஏற்பாடு செய்யும்படி அமைச்சு ஊக்குவித்துள்ளது.

  • பிரதமர் புத்தகப் பரிசு
  • கணக்கு மற்றும் அறிவியலுக்கான லீ குவான் இயூ விருது
  • திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் லீ குவான் இயூ விருது
  • தலைசிறந்த வழக்கநிலை மாணவர்களுக்கான லீ குவான் இயூ விருது
  • அனைத்துத்துறை உன்னதத்திற்கான லீ குவான் இயூ விருது
  • சிறப்புச் சாதனைக்கான லீ குவான் இயூ விருது,
  • தலைசிறந்த அனைத்துத்துறைச் சாதனையாளருக்கான லீ குவான் இயூ விருது

ஆகியவற்றை மாணவர்கள் பெற்றுக்கொள்வர்.

இருமொழிகளிலும் சிறந்து விளங்கும் மாணவர்களுக்குப் பிரதமர் புத்தகப் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 1974ஆம் ஆண்டு அந்தப் பரிசு அறிமுகம் கண்டது. தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, புகுமுகப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் அதற்குத் தகுதிபெறுவர். இவ்வாண்டு 39 மாணவர்கள் பிரதமர் புத்தகப் பரிசைப் பெறுகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்