Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பாலர் பள்ளி மாணவர் இரண்டு வாரங்களாகவே பள்ளிக்கு வரவில்லை

COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பாலர் பள்ளி மாணவர் இரண்டு வாரங்களாகவே பள்ளிக்கு வரவில்லை

வாசிப்புநேரம் -

COVID-19 நோய்த்தொற்றால் அண்மையில் பாதிக்கப்பட்ட பாலர் பள்ளி மாணவர், இரண்டு வாரங்களாகவே பள்ளிக்கு வரவில்லை என்று குழந்தைப் பருவ மேம்பாட்டு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

பாசிர் ரிஸில் உள்ள Bethesda பாலர் பள்ளியில் படிக்கும் அந்தக் குழந்தை, நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவதற்கு முன்னரே இரண்டு வாரங்களாகப் பள்ளிக்கு வரவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

குழந்தைக்கு, ஏப்ரல் 29ஆம் தேதி நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபருடன் குழந்தை நெருக்கமாக இருந்ததால் அது, ஏப்ரல் 15ஆம் தேதி முதல் தனிமைப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குழந்தை, கடைசியாக ஏப்ரல் 14ஆம் தேதி பள்ளிக்கு சென்றது.

இரண்டு வாரங்களுக்கு மேல் குழந்தையுடன் தொடர்பு இல்லாமல் இருந்ததால், அந்த பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளும் ஊழியர்களும் தனிமைப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பள்ளி, ஏப்ரல் 29ஆம் தேதி கிருமி நாசினியால் தீவிரமாகச் சுத்தம் செய்யப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்