Images
  • moe kindergarten
    (படம்: MOE Website)

கல்வியமைச்சின் பாலர் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கும் பதிவு - பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்குகிறது

கல்வியமைச்சின் பாலர் பள்ளிகளில் அடுத்த ஆண்டு பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான இணையப் பதிவு அடுத்த மாதம் 7-ஆம் தேதியிலிருந்து 11-ஆம் தேதி வரை இடம்பெறவுள்ளது.

கல்வியமைச்சின் 36 பாலர் பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

2016 ஜனவரி 2 தேதியிலிருந்து 2017 ஜனவரி முதலாம் தேதி வரை பிறந்த சிங்கப்பூர் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் பாலர்பள்ளி சேர்க்கைக்குப் பதிவு செய்யலாம்.

அதுபற்றிய கூடுதல் விவரங்களை கல்வியமைச்சின் இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.  

Top