Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வருமான வரிச் சட்டத் திருத்த மசோதா குறித்த கருத்துக்களை வரவேற்கும் நிதியமைச்சு

நிதியமைச்சு, நகல் வருமான வரிச் சட்டத் திருத்த மசோதா 2019 குறித்த கருத்துகளை வரவேற்கிறது. விருப்பப்படும் தரப்புகள், இன்றிலிருந்து ஜூலை 10ஆம் தேதி வரை தங்களின் கருத்துகளைச் சமர்ப்பிக்கலாம். 

வாசிப்புநேரம் -

நிதியமைச்சு, நகல் வருமான வரிச் சட்டத் திருத்த மசோதா 2019 குறித்த கருத்துகளை வரவேற்கிறது. விருப்பப்படும் தரப்புகள், இன்றிலிருந்து ஜூலை 10ஆம் தேதி வரை தங்களின் கருத்துகளைச் சமர்ப்பிக்கலாம்.

இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 7 மாற்றங்கள் வருமான வரிச் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள திருத்தங்களில் அடங்கும்.
தனிநபர் வருமான வரிக் கழிவு அவற்றுள் ஒன்று.

இருநூறாம் ஆண்டு நிறைவு போனஸின் ஒரு பகுதியாக 200 வெள்ளிக்கு மேல் போகாத 50 விழுக்காட்டு வரித் தள்ளுபடி 2019 மதிப்பீட்டு ஆண்டில் வரி செலுத்தும் அனைத்து சிங்கப்பூர்வாசிகளுக்கும் வழங்கப்படும். நடப்பில் உள்ள வரிக் கொள்கைகள், நிர்வாகம் ஆகியவற்றில் 12 மாற்றங்களையும் சட்டத் திருத்த மசோதா முன்வைக்கிறது.

சிங்கப்பூரின் வருமான வரி முறையில் அவ்வப்போது செய்யப்படும் மறுஆய்வின் விளைவாக அந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேல் விவரங்களை நிதியமைச்சின் இணையத் தளத்திலும் REACH கருத்தறியும் இணையத்தளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் மின்னஞ்சல், தொலைப்பிரதி அல்லது அஞ்சல் மூலமாக உங்கள் கருத்துகளை அனுப்பி வைக்கலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்