Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மனைவியின் புற்றுநோய் சிகிச்சைக்கு மத்திய சேம நிதியைப் பயன்படுத்தக் கோரிக்கை - என்ன பதில் கிடைத்தது?

மனைவியின் தனியார் மருத்துவமனைக் கட்டணத்தைச் செலுத்தத் தமது மத்திய சேம நிதி ஓய்வுக்காலத் தொகையைப் பயன்படுத்திக்கொள்ள திரு. சூரிய தாஸ் விடுத்த கோரிக்கையின் தொடர்பில், சுகாதார அமைச்சும், மத்திய சேம நிதிக் கழகமும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
மனைவியின் புற்றுநோய் சிகிச்சைக்கு மத்திய சேம நிதியைப் பயன்படுத்தக் கோரிக்கை - என்ன பதில் கிடைத்தது?

(படம்: Screengrab -YouTube)

மனைவியின் தனியார் மருத்துவமனைக் கட்டணத்தைச் செலுத்தத் தமது மத்திய சேம நிதி ஓய்வுக்காலத் தொகையைப் பயன்படுத்திக்கொள்ள திரு. சூரிய தாஸ் விடுத்த கோரிக்கையின் தொடர்பில், சுகாதார அமைச்சும், மத்திய சேம நிதிக் கழகமும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

திருமதி சரோஜினி, 2017ஆம் ஆண்டிலிருந்து கடுமையான சினைப்பைப் புற்றுநோயால் அவதியுறுகிறார்.

Mount Elizabeth மருத்துவமனை, Parkway புற்றுநோய் நிலையம் ஆகியவற்றில் அவர் சிகிச்சை மேற்கொண்டார்.

அவரது நோய் குணமாகும் கட்டத்தில் இல்லை என்று Parkway புற்றுநோய் நிலையம் தம்பதியிடம் விளக்கிக்கூறியது.

பின்னர் திருமதி. சரோஜினி தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையை நாடினார்.

அங்கும் அவரது நோயின் கடுமை பற்றிய அதே முடிவு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் எந்த நேரமும் அரசாங்க மானியத்தோடு சிகிச்சை பெற அவர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையை நாடலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சைக்காக மீண்டும் Parkway நிலையத்தை நாடினார் திருமதி. சரோஜினி. அங்கு அரசாங்க மானியம் கிடைக்காது. இருப்பினும் MediShield Life திட்டத்தின்கீழ், அவருக்கு மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற, இதுவரை 60ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டுள்ளது.

தனியார் காப்பீட்டு நிறுவனம், MediShield Life இரண்டின் மூலமாகவும் மொத்தம் 300ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டது.

திருமதி. சரோஜினியின் நிலையைக் கருத்தில்கொண்டு அவரது மத்திய சேம நிதிச் சேமிப்புத் தொகை முழுவதும் அவருக்கு வழங்கப்பட்டுவிட்டது.

கழகம் அதன் வீட்டுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், எஞ்சியிருந்த 180ஆயிரம் வெள்ளிக்கும் அதிகமான வீட்டுக் கடனை அடைத்துவிட்டது.

திரு. சூரிய தாஸின் மத்திய சேம நிதிக் கணக்கிலிருந்தும் சுமார் 9ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டுள்ளது.

தம்பதியின் சிரமமான நிலையைப் புரிந்துகொள்ள முடிவதாகக் கூறிய கூட்டறிக்கை, திருமதி. சரோஜினி அரசாங்க மானியத்துடன் தேசியப் பல்கலைக் கழக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வாய்ப்பு இருப்பதை சுட்டியது.

அவ்வாறு செய்தால் MediFund மூலம் கூடுதல் நிதியுதவிக்கும் விண்ணப்பிக்கலாம் என்று அது கூறியது.

இணையத்தில் தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் பரவுவதால், திரு. சூரிய தாஸின் கோரிக்கை குறித்துத் தெளிவுபடுத்தவே கூட்டறிக்கையை வெளியிட்டதாக சுகாதார அமைச்சும், மத்திய சேம நிதிக் கழகமும் கூறின. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்