Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

HIV தகவல் கசிவுச் சம்பவத்தை மூடி மறைக்கும் நோக்கத்துடன் சுகாதார அமைச்சு செயல்படவில்லை: சுகாதார அமைச்சர் கான்

சிங்கப்பூரில் நேர்ந்த HIV தகவல் கசிவுச் சம்பவம் தொடர்பான சுகாதார அமைச்சின் நடவடிக்கைகளை நாடாளுமன்றத்தில் தற்காத்துப் பேசியுள்ளார் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங்.

வாசிப்புநேரம் -
HIV தகவல் கசிவுச் சம்பவத்தை மூடி மறைக்கும் நோக்கத்துடன் சுகாதார அமைச்சு செயல்படவில்லை: சுகாதார அமைச்சர் கான்

(படம்: CNA)

சிங்கப்பூரில் நேர்ந்த HIV தகவல் கசிவுச் சம்பவம் தொடர்பான சுகாதார அமைச்சின் நடவடிக்கைகளை நாடாளுமன்றத்தில் தற்காத்துப் பேசியுள்ளார் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங்.

இன்று (பிப்ரவரி 12) நாடாளுமன்றத்தில் பேசிய திரு. கான், சம்பவத்தை மூடி மறைக்கும் நோக்கத்துடன் அமைச்சு செயல்பட்டது எனும் குற்றச்சாட்டை நிராகரித்தார்.

சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள் ஆகியோரின் நலனைக் கருதி அது செயல்பட்டதாக அவர் கூறினார்.

அமெரிக்காவைச் சேர்ந்த மிக்கி K ஃபர்ரேரா புரோசெஸ் (Mikhy K Farrera Brochez) HIVயால் பாதிக்கப்பட்ட 14,200 பேரின்
தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் வெளியாக்கினார்.

சம்பவம் குறித்து சுகாதார அமைச்சு கடந்த மாதம் அறிவித்தது.

புரோசெஸ்ஸிடம் HIV கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் இருக்கக்கூடும் என்பது 2016இல் முதல்முறையாக சுகாதார அமைச்சுக்குத் தெரியவந்தது.

அதன் தொடர்பாகக் காவல்துறையிடம் புகார் பதிவு செய்யப்பட்டது.

ஆனால் புரோசெஸ்ஸிடம் HIV தொடர்பான தகவல்கள் இருக்கும் என்பதற்கு அப்போது எந்தவித ஆதாரமும் இல்லை என்று அமைச்சர் கான் கூறினார். அதோடு பாதிக்கப்பட்டவர்கள் மனவுளைச்சலுக்கு ஆளாவார்கள் எனும் காரணத்தால் பொதுமக்களுக்கு அச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் சொன்னார்.

ஆனால் ஆக அண்மையச் சம்பவத்தின்போது புரோசெஸ் தகவல்களை இணையத்தில் பகிர்ந்தார். அதோடு அவரிடம் மேலும் அதிகமான HIV தொடர்பான தகவல்கள் இருக்கக்கூடும் என்று அமைச்சு நம்பியதால் சம்பவம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டதாகத் திரு. கான் விளக்கம் அளித்தார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்