Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19 நோயாளிகள் அதிகரிக்கும் சாத்தியம் காரணமாக, சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் அவசரமற்ற சிகிச்சையைத் தள்ளி வைக்க வேண்டுகோள்

COVID-19 நோயாளிகள் அதிகரிக்கும் சாத்தியம் காரணமாக, சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் அவசரமற்ற சிகிச்சையைத் தள்ளி வைக்க வேண்டுகோள்

வாசிப்புநேரம் -
COVID-19 நோயாளிகள் அதிகரிக்கும் சாத்தியம் காரணமாக, சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் அவசரமற்ற சிகிச்சையைத் தள்ளி வைக்க வேண்டுகோள்

கோப்புப்படம்: TODAY

சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும், அவசரமற்ற சிகிச்சையைத் தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

ஆகப் பெரிய கிருமித்தொற்று இடமாக டான் டொக் செங் மருத்துவமனை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது.

COVID-19 நோயாளிகள் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதால், மருத்துவமனைகளில் போதிய அளவு படுக்கைகள் வைத்திருப்பது உள்ளிட்ட வளங்களைப் பாதுகாக்க விரும்புவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

நோயாளிகளின் பராமரிப்பு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய பொதுத்துறை, தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக அது சொன்னது.

தேவைப்படும் எவருக்கும், மருத்துவமனைகள் சுகாதாரப் பராமரிப்பை மறுக்கமாட்டா என்று அமைச்சு உறுதி கூறியது.

உயிருக்கு ஆபத்து நேரக்கூடிய சூழலில் மட்டும், அவசர சிகிச்சைப் பிரிவை நாடுமாறு அமைச்சு பொதுமக்களை வலியுறுத்தியது.

டான் டொக் செங் மருத்துவமனையின் விபத்து, அவசரகால நோயாளிகளுக்கும் சிகிச்சையளிக்க வேண்டியிருப்பதால், பிற மருத்துவமனைகளில் கூடுதல் நேரம் காத்திருக்க நேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்