Images
  • Table

கிருமிப்பரவல் அதிகரித்து வருவதால் இரண்டாம் கட்ட விழிப்புநிலையை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் : சுகாதார அமைச்சு

சிங்கப்பூரில் கிருமிப்பரவல் அதிகரித்து வருவதால், இரண்டாம் கட்ட விழிப்புநிலையை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகக் குழுமத்துடன் தொடர்புடைய ஈரச் சந்தைகள், உணவங்காடி நிலையங்களில் கிருமித்தொற்று அடையாளம் காணப்படும் நிலையில் அமைச்சு அவ்வாறு கூறியுள்ளது.

தற்போதுள்ள நிலைமை மிகுந்த கவலைக்குரியது. அது சமூகத்திலும், நாட்டிலும் நிறையப் பேரைப் பாதிக்கக்கூடும் என்று அமைச்சு சுட்டியது.

கிருமிப்பரவலால், சமூகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் சாத்தியம் உண்டு என்று அமைச்சு கூறியது.  

Top