Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19 தொற்றால் மாண்ட பொது மருத்துவருக்கு நோயாளியிடமிருந்து கிருமி தொற்றியதற்கு ஆதாரமில்லை: சுகாதார அமைச்சு

சிங்கப்பூரில் COVID-19 நோயால் மாண்ட பொது மருத்துவருக்கு அவரது மருந்தகத்தில் நோய் தொற்றவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
COVID-19 தொற்றால் மாண்ட பொது மருத்துவருக்கு நோயாளியிடமிருந்து கிருமி தொற்றியதற்கு ஆதாரமில்லை: சுகாதார அமைச்சு

(படம்: Google Maps Street View)

சிங்கப்பூரில் COVID-19 நோயால் மாண்ட பொது மருத்துவருக்கு அவரது மருந்தகத்தில் நோய் தொற்றவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மருந்தகத்துக்கு வந்த நோயாளியிடம் இருந்து மருத்துவருக்கு நோய் தொற்றியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் அது கூறியது.

65 வயது டாக்டர் ரேமன்ட் யுவென் (Raymond Yuen) கடந்த சனிக்கிழமை நோய்த்தொற்றால் மாண்டார்.

அவரின் மருந்தகம் பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகமாகவோ நோய்த்தொற்றுப் பரிசோதனை மருந்தகமாகவோ செயல்படவில்லை.

அவரது மருந்தகத்திற்கு COVID-19 நோயாளிகள் யாரும் சென்றதற்கான தரவுகளும் இல்லை என்று அமைச்சு தெளிவுப்படுத்தியது.

மாண்ட மருத்துவர் ஒரு முறை மட்டும் தான் தடுப்பூசி போட்டிருந்தார் என்றும் அவர் mRNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாத தடுப்புமருந்தையே போட்டுக்கொண்டதாகவும் அமைச்சு கூறியது.

மருத்துவருக்கு வேறெந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லை.

அவரது மறைவுக்கு மெக்பர்சன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் தமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.

டாக்டர் யுவென் மிக அன்பானவர் என்றும் மெக்பர்சன் தொகுதியில் உள்ள வசதி குறைந்தவர்களுக்கு அவர் பலமுறை உதவியுள்ளதாகவும் திருவாட்டி டின் Facebook பதிவில் குறிப்பிட்டார்.

- CNA/jt

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்