Images
  • sumang
    (படம்:Google Maps Street View)

சுமாங் வாக், ஹவ்காங் அவென்யூ ஆகியவற்றில் நடத்தப்பட்ட கிருமித்தொற்றுப் பரிசோதனை - விவரங்கள்

சுமாங் வாக்கிலும், ஹவ்காங் அவென்யூ எட்டிலும் நடத்தப்பட்ட கிருமித்தொற்றுப் பரிசோதனை குறித்த விவரங்களை, சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

நேற்று மாலை ஐந்து மணி நிலவரப்படி, சுமாங் வாக், புளோக் 325A இல் கிருமித்தொற்றுப் பரிசோதனை செய்துகொண்ட 452 குடியிருப்பாளர்களுக்கும், கிருமித்தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஹவ்காங் அவென்யூ 8 புளோக் 506க்கும் அக்கம்பக்க புளோக்குகளுக்கும் சென்று வந்த 4,347 பேர், தாங்களாகவே முன்வந்து கிருமித்தொற்றுப் பரிசோதனையைச் செய்துகொண்டனர்.

அவர்களில் 4,273 பேருக்குக் கிருமித்தொற்று இல்லை என, உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் 74 பேர், பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றனர். 

Top