Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'சிங்கப்பூரில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ள COVID-19 கிருமித்தொற்று நோயாளிகளால் சமூகத்திற்கு ஆபத்து இல்லை'

சிங்கப்பூரில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ள COVID-19 கிருமித்தொற்று நோயாளிகள் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
'சிங்கப்பூரில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ள COVID-19 கிருமித்தொற்று நோயாளிகளால் சமூகத்திற்கு ஆபத்து இல்லை'

(படம்: National Centre for Infectious Diseases)

சிங்கப்பூரில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ள COVID-19 கிருமித்தொற்று நோயாளிகள் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.

அவர்களால் சமூகத்திற்கு ஆபத்து ஏதுமில்லை என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

மருத்துவமனையிலிருந்து வெளியேறும் முன்னர் நோயாளிகள் பல்வேறு பரிசோதனைகளைச் செய்கின்றனர் என்று அமைச்சின் மருத்துவச் சேவைகளுக்கான இயக்குநர் கென்னத் மாக் ( Kenneth Mak) குறிப்பிட்டார்.

சில சமயங்களில், குணமடைந்துள்ளவர்களின் மலக் கழிவில் COVID-19 கிருமி தென்படலாம்.

நோய்த்தொற்றுக்கு ஆளாகிக் குணமடைந்தவர்களின்
மலக்கழிவு மாதிரிகளில் COVID-19 கிருமி இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மலக்கழிவில் COVID-19 கிருமி இல்லை என்றால், நோயாளிகள் முழுமையாகக் குணமடைந்துள்ளனர் என்று உலகச் சுகாதார நிபுணர்களால் கருதப்படுகிறது.

எனவே, அவர்கள் மூலம் கிருமி பரவுவதற்குச் சாத்தியம் இல்லை என்று திரு. மாக் கூறினார்.

குணமடைந்துள்ளவர்கள் வீட்டில் இருக்கும்படியும் கூட்ட நெரிசல்மிக்க இடங்களைத் தவிர்க்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் இதுவரை, COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 66 பேர் குணமடைந்து, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்