Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

செப்டம்பர் 24ஆம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு மருத்துவமனைகளில் வருகையாளர்களுக்கு அனுமதி இல்லை

செப்டம்பர் 24ஆம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு மருத்துவமனைகளில் வருகையாளர்களுக்கு அனுமதி இல்லை

வாசிப்புநேரம் -
செப்டம்பர் 24ஆம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு மருத்துவமனைகளில் வருகையாளர்களுக்கு அனுமதி இல்லை

(கோப்புப் படம்: Mediacorp)

சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனைகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுகின்றன.

வரும் 24ஆம் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்கு அங்கு செல்வதற்கு வருகையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அக்டோபர் 23ஆம் தேதி வரை புதிய விதிமுறை நடப்பில் இருக்கும். அனைத்து பொது, சமூக, தனியார் மருந்துவமனைகளுக்கும் அது பொருந்தும்.

கடந்த சில நாள்களாகச் சிங்கப்பூரில் சமூக அளவில் நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

மருத்துவமனை ஊழியர்களுக்கும் மருத்துவமனைக்குச் சொந்தமான இடங்களிலும் நோய்ப்பரவல் பாதிப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதனால் அந்த இடங்கள் மூடப்பட்டன, ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

மருந்துவமனைகள் மீதும் சுகாதார கட்டமைப்பு மீதும் நெருக்கடி எழாமல் இருக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டது.

கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் குறிப்பிட்ட வருகையாளர்கள் சிலர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

அவர்கள் COVID-19 பரிசோதனைகளும் எடுத்திருக்க வேண்டும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்