Images
  • supreme court
    (படம்: CNA)

8 வயதுச் சிறுமியிடம் ஆபாசக் காணொளிகளைக் காட்டி மானபங்கம் செய்த அண்டை வீட்டுக்காரர்

அண்டை வீட்டில் வசிக்கும் 8 வயதுச் சிறுமியை மானபங்கம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் ஆடவர்.

மலேசியாவைச் சேர்ந்த சிங்கப்பூர் நிரந்தரவாசியான அந்த 47 வயது ஆடவர், 16 வயதுக்குட்பட்டவரை மானபங்கம் செய்த இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.

அவர், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்ததால் அவர்கள் அவரிடம் வீட்டு சாவியைக் கொடுத்திருந்தனர்.

அதனைக் கொண்டு ஆடவர் சிறுமியின் வீட்டினுள் நுழைந்து அவரிடம் ஆபாசக் காணொளிகளைக் காட்டியிருக்கிறார்.

பின் சிறுமியை மானபங்கம் செய்திருக்கிறார்.

நபரின் நடவடிக்கைகளைப் பற்றி சிறுமி தாயாரிடம் கூறியிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து சிறுமியின் தாயார் ஆடவரை விசாரிக்க, இருவரும் காவல்துறையிடம் புகார் பதிவுசெய்தனர்.

செப்டம்பர் 12 அன்று ஆடவரின் தண்டனை தீர்மானிக்கப்படும்.

அவருக்கு அதிகபட்சத் தண்டனையாக 5 ஆண்டுச் சிறை, அபராதம், பிரம்படி அல்லது மூன்றும் விதிக்கப்படலாம்.

 

Top