Images
  • gavel
    ( படம்: AFP )

பெண் வாடிக்கையாளரை மானபங்கப்படுத்திய உடல் பிடிப்பாளருக்குச் சிறை

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

பெண் வாடிக்கையாளரை மானபங்கப்படுத்தியதற்காகவும், ஆபாசக் காணொளிகளை வைத்திருந்த குற்றத்திற்காகவும் உடல் பிடிப்பாளருக்கு 10 மாதத்திற்கும் கூடுதலாகச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

58 வயதான அந்த ஆடவருக்கு 3,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்தது.

உடல் பிடிப்பின் போது தலை, கால், கழுத்து பகுதிகளை மட்டும் பிடித்துவிடுமாறு பெண் வாடிக்கையாளர் கூறியுள்ளார்.

ஆனால் உடல் பிடிப்பாளர் அந்தப் பெண்ணிடம் தவறுதலாக நடந்து கொண்டார். அதைத் தொடர்ந்து உடல் பிடிப்பாளர் மீது காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது.

உடல் பிடிப்பாளரிடம் விசாரணை நடத்திய போது அவரின் கைத்தொலைபேசியில் ஆபாச் காணொளிகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

பெண்ணை மானபங்கப்படுத்தியக் குற்றத்திற்காக ஆடவருக்கு 2 ஆண்டு வரை சிறைத் தண்டனையோ, அபராதமோ, பிரம்படிகளோ விதிக்க சட்டத்தில் இடமுண்டு. 

Top