Images
  • gavel
    ( படம்: AFP )

பதின்ம வயதுப் பெண்ணை மானபங்கம் செய்த ஆடவருக்குச் சிறை

பதின்ம வயதுப் பெண்ணைப் பேருந்து நிறுத்தத்தில் மானபங்கம் செய்த குற்றத்திற்காகவும், அனுமதியின்றி வீட்டிற்குள் நுழைந்து 500 வெள்ளியைத் திருடிய குற்றத்திற்காகவும் 45 வயது ஆடவருக்கு 21 மாதம் மூன்று வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர் திருட்டுக் குற்றத்தை புரிந்துதுள்ளார்.

பின், இந்தாண்டு ஜனவரி மாதத்தில் அந்த ஆடவர் தம்பனீஸ் அவென்யூ இரண்டில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் 14 வயது உயர்நிலைப் பள்ளி மாணவியை மானபங்கம் செய்துள்ளார்.

அதைத் தொடர்ந்து அந்த ஆடவர் பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.

மானபங்கக் குற்றத்திற்காக அந்த ஆடவருக்கு இரண்டு ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையோ, அபராதமோ, பிரம்படியோ அல்லது மூன்றுமோ விதிக்கப்பட்டிருக்கலாம்.

குற்றம் புரிவதற்காக ஒரு வீட்டுக்குள் நுழைந்த குற்றத்திற்காக இரண்டு ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

வீடு புகுந்து திருடிய குற்றத்திற்காக 7 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம். 

Top