Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிறுவனை மானபங்கம் செய்த சந்தேகத்தின் பேரில் 60 வயது ஆடவர் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூரில், சிறுவனை மானபங்கம் செய்த சந்தேகத்தின் பேரில் 60 வயது ஆடவர் மீது நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 30) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சிறுவனை மானபங்கம் செய்த சந்தேகத்தின் பேரில் 60 வயது ஆடவர் மீது குற்றச்சாட்டு

(கோப்புப் படம்: Jeremy Long)

சிங்கப்பூரில், சிறுவனை மானபங்கம் செய்த சந்தேகத்தின் பேரில் 60 வயது ஆடவர் மீது நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 30) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

முகமது தாஹா அஹ்மது (Mohamed Taha Ahmad) எனும் அந்த ஆடவர், 12 வயதுச் சிறுவனை மானபங்கம் செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம், கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 22) அன்று பிடோக் வட்டாரத்தில் நடந்தது.

தாஹா, சிறுவனின் காற்சட்டையையும் உள்ளாடையையும் அகற்றியதாகக் கூறப்படுகிறது.

அவர், சிறுவனுக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

தாஹா மீண்டும், அடுத்த மாதம் நீதிமன்றம் திரும்புவார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுச் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சந்தேக நபர், 50 வயதுக்கு மேற்பட்டவர் என்பதால், அவருக்குப் பிரம்படி விதிக்கப்பட மாட்டாது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்