Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பிடோக்கில் தற்காலிகத் தங்கும் விடுதிக்குச் செல்லும் ஊழியர்களின் நிலை குறித்து மனிதவள அமைச்சு விளக்கம்

பிடோக்கில் தற்காலிகத் தங்கும் விடுதிக்குச் செல்லும் ஊழியர்களின் நிலை குறித்து மனிதவள அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.

வாசிப்புநேரம் -
பிடோக்கில் தற்காலிகத் தங்கும் விடுதிக்குச் செல்லும் ஊழியர்களின் நிலை குறித்து மனிதவள அமைச்சு விளக்கம்

(படம்: Facebook/Gerald Giam)

பிடோக்கில் தற்காலிகத் தங்கும் விடுதிக்குச் செல்லும் ஊழியர்களின் நிலை குறித்து மனிதவள அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.

சிங்கப்பூரில் சில தங்கும் விடுதிகளில் வசிப்போர், தங்கள் ஓய்வு நாள்களில் பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்வதற்கான முன்னோடித் திட்டம், இம்மாதம் தொடங்கப்படும் என்று மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது.

அல்ஜூனிட் குழுத்தொகுதி நாடாளும்னற உறுப்பினராய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஜெரால்ட் கியாம் சுமார் 40 வெளிநாட்டு ஊழியர்கள் பிடோக்கில் உள்ள கட்டுமானத் தளத்தின் தற்காலிகத் தங்கும் விடுதிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக Facebook பதிவில் குறிப்பிட்டார்.

சிறப்புப் பள்ளி ஒன்றை நிறுவுவதற்கான கட்டுமானத் தளம் அது.

கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் முடிவடையும் வரையில் அவர்கள் அங்கு தங்குவர் என்று கூறப்பட்டிருந்தது.

கட்டுமானப் பணிகள் முடிவடையும் வரையில் ஊழியர்கள் தற்காலிகத் தங்கும் விடுதியில் அடைந்துகிடப்பர் என்று எண்ணி சமூக ஊடகத்தில் பலர் தங்கள் சினத்தை வெளிப்படுத்தினர்.

அதன் தொடர்பில் மனிதவள அமைச்சு Facebook வாயிலாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

பிடோக் கட்டுமானத் தளத்தில் வேலைசெய்யும் ஊழியர்கள் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காக வெளியில் செல்ல முடியும் என்று அமைச்சு விளக்கியது.

அவர்கள் ஏற்கனவே அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வோர் அறையிலும் 10 பேருக்கு மேல் தங்குவதில்லை என்று திரு.கியாம் தம் பதிவில் தெரிவித்தார்.

அவர்களுக்கு அன்றாடம் உணவும், இணைய வசதிகளும் வழங்கப்படும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்