Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இயந்திரங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தத் தவறிய 276 நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

இயந்திரங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தத் தவறியதன் தொடர்பில் மனிதவள அமைச்சு நிறுவனங்களுக்கு எதிராக 850 நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

வாசிப்புநேரம் -
இயந்திரங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தத் தவறிய 276 நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

(படம்: MOM)

இயந்திரங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தத் தவறியதன் தொடர்பில் மனிதவள அமைச்சு நிறுவனங்களுக்கு எதிராக 850 நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இவ்வாண்டின் முதல் 5 மாதங்களில் இயந்திரப் பயன்பாடு தொடர்பில்,
பெரிய அளவிலான 30 விபத்துகள் நேர்ந்ததாக அமைச்சு தெரிவித்தது.

மனிதவள அமைச்சு இவ்வாண்டின் ஏப்ரல் மாதமும் கடந்த மாதமும்
சோதனைகளை மேற்கொண்டது.

கடல்துறை, உற்பத்தி, கட்டுமானம் ஆகிய துறைகளைச் சேர்ந்த
350 நிறுவனங்களில் 380 சோதனை நடவடிக்கைகள் நடத்தப்பட்டன.

அவற்றுள் 276 நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

6 நிறுவனங்களுக்கு வேலை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

78 நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட மொத்த அபராதத் தொகை 91ஆயிரம் வெள்ளி.

உடல் உறுப்புகளைத் துண்டிக்கும் ஆபத்துள்ள இயந்திர பாகங்களை முறையாக மூடி வைக்காமல் பயன்படுத்த அனுமதித்தது, பயன்படுத்தாதபோது அவற்றைச் செயலற்ற
நிலையில் வைக்கும் நடைமுறைகளைப் பின்பற்றாதது,

ஆபத்துகளைப் போதிய அளவு மதிப்பிடாதது-போன்ற விதிமீறல்களை நிறுவனங்கள் புரிந்திருந்தன.

வேலையிடப் பாதுகாப்பு சுகாதாரச் சட்டத்தின்கீழ் ஊழியர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காத நிறுவனங்களுக்கு, முதல் விதிமீறலுக்கு 500 ஆயிரம் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.





 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்