Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

லிட்டில் இந்தியா உள்ளிட்ட இடங்களில் வெளிநாட்டு ஊழியர்கள் கூடவேண்டாம்: மனிதவள அமைச்சு அறிவுறுத்தல்

லிட்டில் இந்தியா, லக்கி பிளாஸா, சிட்டி பிளாஸா, பெனின்சுலா பிளாஸா (Little India, Lucky Plaza, City Plaza, Peninsula Plaza) போன்ற கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களைத் தவிர்த்திடும்படி வெளிநாட்டு ஊழியர்களுக்கு மனிதவள அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. 

வாசிப்புநேரம் -

COVID-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த வெளிநாட்டு ஊழியர்களும், பணிப்பெண்களும் பல இடங்களில் கூட்டமாகச் சேர்வதைத் தவிர்க்கும் நோக்கில் மனிதவள அமைச்சு அவ்வாறு கூறியுள்ளது.

ஓய்வு நாள்களில் அவரவர் இருப்பிடங்களில் தங்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டது.

முக்கியமான அலுவல்களுக்காக மட்டுமே வெளியே செல்லவேண்டும் என்றும், அப்போதும் விரைவில் தங்குமிடங்களுகுத் திரும்பும்படியும் அமைச்சு சொன்னது.

ஊழியர்கள் எங்கு செல்கிறார்கள் என்பதைத் தெரிந்துவைத்துக்கொள்ளுமாறு முதலாளிகளுக்கு அமைச்சு அறிவுறுத்துகிறது.

ஒரே இடத்தில் 10 பேருக்கு மேல் கூடக்கூடாது என்பதைச் சுட்டிய அமைச்சு, வெளிநாட்டுப் பணிப்பெண்கள் வெளியிடங்களில் பெரிய அளவில் கூடினால், கலைந்து செல்லுமாறு வலிறுத்தப்படுவர் என்று அமைச்சு கூறியுள்ளது.

விதிகளை மீறுவோரின் வேலை அனுமதிச்சீட்டுகள் மீட்டுக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்