Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19 கிருமித்தொற்று: 14 நாள் கட்டாய விடுப்பால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள், சுயதொழில் செய்வோருக்கு ஆதரவு

COVID-19 கிருமித்தொற்று: 14 நாள் கட்டாய விடுப்பால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள், சுயதொழில் செய்வோருக்கு ஆதரவு

வாசிப்புநேரம் -

மனிதவள அமைச்சு, COVID-19 கிருமிப் பரவல் தொடர்பில் ஊழியர்கள் 14 நாள் கட்டாய விடுப்பிலிருப்பதால் பாதிக்கப்படும் வர்த்தக நிறுவனங்களுக்கும், சுய தொழில் செய்வோருக்கும் ஆதரவு வழங்கவிருக்கிறது.

LOASP எனப்படும் கட்டாய விடுப்பு ஆதரவுத் திட்டம் அதற்கு வகைசெய்யும்.

தகுதிபெறும் முதலாளிகள் பாதிக்கப்பட்ட ஒவ்வோர் ஊழியருக்கும் விடுப்பிலிருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் அன்றாடம் 100 வெள்ளி மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ஊழியர்கள் சிங்கப்பூரராகவோ, நிரந்தரவாசியாகவோ, சீனத் தலைநிலத்திற்குச் சென்ற மாதம் 31ஆம் தேதிக்கு முன்பு பயணம் செய்த வேலை அனுமதிச் சீட்டு பெற்றவராகவோ இருக்கவேண்டும்.

சுயதொழில் செய்யும் சிங்கப்பூரர்களும், நிரந்தரவாசிகளும் கட்டாய விடுப்பிலிருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் 100 வெள்ளி ஆதரவிற்கு விண்ணப்பிக்கலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்