Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

2018இல் சிங்கப்பூரர்களின் வேலைவாய்ப்பு விகிதம் வெளிநாட்டினரைவிட ஒரு மடங்கு அதிகம்

தொழிலாளர் சந்தை சென்ற ஆண்டு மேம்பட்டிருந்தது. சிங்கப்பூரர்கள் அதிக எண்ணிக்கையில் வேலையில் அமர்த்தப்பட்டது ஒட்டுமொத்த வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.

வாசிப்புநேரம் -
2018இல் சிங்கப்பூரர்களின் வேலைவாய்ப்பு விகிதம் வெளிநாட்டினரைவிட ஒரு மடங்கு அதிகம்

(படம்: Reuters)

தொழிலாளர் சந்தை சென்ற ஆண்டு மேம்பட்டிருந்தது.

சிங்கப்பூரர்கள் அதிக எண்ணிக்கையில் வேலையில் அமர்த்தப்பட்டது ஒட்டுமொத்த வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.

மனிதவள அமைச்சு வெளியிட்ட முதற்கட்ட மதிப்பீடுகள் அதை உறுதிப்படுத்தின.

ஓராண்டுக்கு முந்திய நிலவரத்தோடு ஒப்பிடுகையில், சராசரி வேலையின்மை விகிதமும், நீண்டகால வேலையின்மை விகிதமும் குறைந்து காணப்பட்டன.

ஆட்குறைப்பும் கணிசமாகக் குறைந்திருந்தது.

வெளிநாட்டு இல்லப்பணிப்பெண்களைத் தவிர்த்து, சென்ற ஆண்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு 38,300 உயர்ந்தது.

ஓராண்டுக்குமுன் அதில் சரிவு காணப்பட்டது.

சிங்கப்பூரர்களிடையே வேலைவாய்ப்பு 27,400ஆக இருந்தது.

அது வெளிநாட்டினர் எண்ணிக்கையைக் காட்டிலும் இரு மடங்குக்கு மேல்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்