Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

2020 தொடங்கியபிறகு 3 வேலையிட மரணங்கள் :மனிதவள அமைச்சு

இந்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்து வேலையிட விபத்துகளில் மூவர் மாண்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
2020 தொடங்கியபிறகு 3 வேலையிட மரணங்கள் :மனிதவள அமைச்சு

படம்: மனிதவள அமைச்சு

இந்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்து வேலையிட விபத்துகளில் மூவர் மாண்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

வேலையிடப் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் மேம்படுத்தும் முயற்சிகளுக்கு அது ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

விழாக்காலம் நெருங்கிவரும் நிலையில், சில நிறுவனங்கள் குறிப்பிட்ட கெடுவுக்குள் வேலையை முடிக்கும் நெருக்குதலை எதிர்நோக்கக்கூடும்.

இருப்பினும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடப்பிலிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டுமென, அமைச்சு எல்லா நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டது.

ஜனவரி 8-ஆம் தேதி, முதல் விபத்து நேர்ந்தது.

ஊழியர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, பாரந்தூக்கி அருகே வாயுத் தோம்புகள் இருந்த பெரிய பெட்டி ஓர் ஊழியர்மேல் கவிழ்ந்து அவரை நசுக்கியதில் அவர் அந்த இடத்திலேயே மாண்டார்.

11ஆம் தேதி நேர்ந்த சம்பவத்தில், சாரக் கட்டுமானம் ஒன்றை ஊழியர்கள் நால்வர் நகர்த்திக் கொண்டிருந்தபோது, கட்டி வைக்கப்படாத அதன் ஒருபகுதி மேலிருந்து கீழே விழுந்தது.

அப்போது படுகாயமடைந்த ஊழியர் ஒருவர், பின்னர் மருத்துவமனையில் மாண்டார்.

மூன்றாவது சம்பவத்தில், இழுவைப் படகிலிருந்து ஊழியர் ஒருவர் கடலுக்குள் விழுந்து மாண்டார்.

போதிய பாதுகாப்பு இல்லாமல் ஊழியர்கள் உயரத்திலிருந்து விழுந்து மாண்டுபோவதாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டது. 

வேலையிட மரண விகிதம், கடந்த 14 ஆண்டுகளாக சுமார் 75 விழுக்காடு குறைந்துள்ளது.

இருப்பினும், இவ்வாண்டு தொடக்கத்தில் நேர்ந்துள்ள மரணங்கள் கவலை அளிப்பதாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்