Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மூன்றாம் காலாண்டில் குறைவான ஊழியர்கள் ஆட்குறைப்புக்கு ஆளாகினர்: மனிதவள அமைச்சு

குறைவான ஊழியர்கள், மூன்றாம் காலாண்டில் ஆட்குறைப்புக்கு இலக்காயினர் என்று மனிதவள அமைச்சின் அறிக்கை கூறியுள்ளது.  

வாசிப்புநேரம் -
மூன்றாம் காலாண்டில் குறைவான ஊழியர்கள் ஆட்குறைப்புக்கு ஆளாகினர்: மனிதவள அமைச்சு

(படம்: Reuters)

குறைவான ஊழியர்கள், மூன்றாம் காலாண்டில் ஆட்குறைப்புக்கு இலக்காயினர் என்று மனிதவள அமைச்சின் அறிக்கை கூறியுள்ளது.

சென்ற ஜூலை மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை 2,800 ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.

ஒப்புநோக்க, சென்ற ஆண்டின் அதே காலக்கட்டத்தில் 3,400 பேர் ஆட்குறைப்புக்கு ஆளானார்கள்.

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 8,200 ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டார்கள்.

ஒப்புநோக்க, சென்ற ஆண்டு அதே காலக்கட்டத்தில் வேலையிழந்தோர் எண்ணிக்கை பதினோராயிரமாக இருந்தது.

மொத்தத்தில் ஊழியர் சந்தை மேம்பட்டிருப்பதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

மூன்றாம் காலாண்டில் ஊழியர் அணியின் வளர்ச்சி இரட்டிப்பானது.

வேலையின்மை விகிதம் சென்றாண்டைவிட குறைந்து காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வேலை தேடுபவர்களைவிட அதிகமான வேலை வாய்ப்புகள் தொடர்ந்து கூடுதலாக இருப்பதாக அமைச்சு கூறியது.

சுகாதாரம், தகவல், தொடர்பு,மொத்த வர்த்தகம் போன்ற துறைகளில் வாய்ப்புகள் உள்ளன என்று அது தெரிவித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்