Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"தேவைப்பட்டபோது எங்கிருந்தீர்கள்?" சிறையில் இருக்கும் அன்னையரிடம் கேள்வி கேட்கும் பிள்ளைகள்

27 வயது ஜேன்...

வாசிப்புநேரம் -
"தேவைப்பட்டபோது எங்கிருந்தீர்கள்?" சிறையில் இருக்கும் அன்னையரிடம் கேள்வி கேட்கும் பிள்ளைகள்

(கோப்புப் படம்: Singapore Prison Service)

((*இதில் இடம்பெறும் அனைத்துப் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன.))

27 வயது ஜேன்...
கடந்த ஈராண்டாகச் சிறைச்சாலையில் இருக்கிறார்..
அவ்வப்போது தம்மைப் பார்க்கவரும் மகளிடம் சாங்கி விமான நிலையத்தில் பணிபுரிவதாகச் சொல்லிவந்தார்.

கடைசி சில சந்திப்புகளின்போது மகளின் கேள்விகளுக்குத் தம்மால் பதிலளிக்க முடியவில்லை என்று ஜேன்
CNA-இடம் சொன்னார்.

எனக்கு நீங்கள் தேவைப்பட்டபோது எங்கிருந்தீர்கள்? இங்கு விமானங்கள் எங்கே?

- ஜேனின் மகள்

பாசமாகப் பேசியபோது முகத்துக்கு நேராகத் "பொய் சொல்வதை நிறுத்துங்கள்" என்று தம் மகள் சொன்னதும் கண்ணீர் வடித்தார் ஜேன்.

இன்று அன்னையர் தினம்...

சிறைச்சாலையில் ஜேனைப் போன்று பல தாய்மார்கள் உள்ளனர். பிஞ்சுக் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டுச் சிறையில் காலத்தைக் கழிக்கும் பெண்களுக்கு இன்றைய தினம் குற்ற உணர்ச்சியை அதிகமாகவே தூண்டும்.

Zoom வழியாக CNAஇடம் பேசிய 31 வயதுத் தாய், தம்முடைய இரண்டு வயது மகனின் வளரும் பருவத்தில் அவனுடன் இல்லை என்பது மனச்சோர்வை ஏற்படுத்தியது என்றார்.

அம்மா இல்லாமல் தங்களின் குழந்தைகள் வாழப் பழகிவிட்டால் தங்களின் கதி என்ன என்ற அச்சம் அந்தப் பெண்களிடத்தில் உள்ளது.

இன்று அந்த அச்சத்தை ஒதுக்கிவிட்டு, சிறைக்குத் தங்களைக் காண வரும் பிள்ளைகளோடு நேரத்தைக் கழிக்கின்றனர் சிறைச்சாலை அன்னையர்.

16 வயதுக்குக் கீழ் உள்ள பிள்ளைகளைப் பிரிந்து மனச்சோர்வுக்கு ஆளாகும் தாய்மாருக்குச் சிறையில் மனநல, நிதி உதவித் திட்டங்கள் உள்ளன.

- CNA/gy(gs) 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்