Images
  • fairwell

திங்கட்கிழமை நாடாளுமன்றம் கூடுகிறது - நடிகர் அலோய்ஷியஸ் பாங் மரணம் குறித்த விவாதம் முக்கியத்துவம் பெறும்

நாடாளுமன்றம் வரும் திங்கட்கிழமை கூடும்போது நடிகர் அலோய்ஷியஸ் பாங்கின் மரணம் குறித்த விவாதம் முக்கிய இடம்பெறும்.

தேசிய சேவை பயிற்சியின்போது ஏற்படும் மரணம், சிங்கப்பூர் ஆயுதப்படைப் பாதுகாப்பு நடைமுறைகளின் மேம்பாடு ஆகியன பற்றி தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் அமைச்சர்நிலை அறிக்கையை வெளியிடுவார்.

நியூசிலந்தில் தேசியச் சேவைப் பயிற்சியின்போது கார்ப்பரல் அலோய்ஷியஸ் பாங் மாண்டார்.

அவருடைய மரணம் குறித்தும், அது பற்றிய விசாரணை நிலவரம் பற்றியும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

எல்லாப் பயிற்சிகளும் குறித்த மறுஆய்வுக்கான கால இடைவெளி, அபாயம் அதிகமுள்ள
நடவடிக்கைகள், பயிற்சியின்போது பாதுகாப்புக் குறைபாடுகள் ஆகியன குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

பிரிட்டனில் காணாமற்போன பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரணநிலை உயர் கணக்குத் தேர்வுத்தாள்கள், Singpost நிறுவனத்தின் மீது எழுந்துள்ள அண்மைய புகார்கள் ஆகியவற்றின் மீதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

புகையிலைப் பொருள்களின் விற்பனை, விளம்பரம் உட்பட 5 மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப்படும். //  

Top