Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூருக்குள் பணம் கொண்டுவருவது - விதிமுறைகள்

குடிநுழைவு அதிகாரிகளிடம் முறையாகத் தெரிவிக்காமல் வரம்புக்கு மிஞ்சிய ரொக்கத்தைச் சிங்கப்பூருக்குள் கொண்டுவரும் பல சம்பவங்கள் அண்மையில் நடந்துள்ளன.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூருக்குள் பணம் கொண்டுவருவது - விதிமுறைகள்

(படம்: Roslan RAHMAN / AFP)

குடிநுழைவு அதிகாரிகளிடம் முறையாகத் தெரிவிக்காமல் வரம்புக்கு மிஞ்சிய ரொக்கத்தைச் சிங்கப்பூருக்குள் கொண்டுவரும் பல சம்பவங்கள் அண்மையில் நடந்துள்ளன.

முதலில், முறையாகத் தெரிவிப்பது என்றால் என்ன? ரொக்கம் கொண்டுவருவதை ஏன் தெரிவிக்கவேண்டும்?

-ஒருவர் சிங்கப்பூரை விட்டுச் செல்லும்போதும் சிங்கப்பூருக்குள் வரும்போதும், 20,000 வெள்ளிக்கு மேல் ரொக்கம் வைத்திருந்தால், உரிய அதிகாரிகளிடம் முறையாகத் தெரிவிக்க வேண்டும்.

-ஒருவர் வெளிநாட்டு நாணயத்தில் 20,000 வெள்ளிக்கு நிகரான தொகைக்கு மேல் வைத்திருந்தாலும் இந்தச் சட்டம் பொருந்தும்.

-நபர்கள் தங்களிடம் இருக்கும் ரொக்கத்தை NP727, Bearer Negotiable Instruments Report எனும் ஆவணங்களில் பதிவு செய்யவேண்டும்.

-ஆவணங்கள் அனைத்துச் சோதனைச் சாவடிகளிலும் காவல் நிலையங்களிலும் கிடைக்கும். காவல்துறையின் இணையவாசல் மூலமாகவும் அதனைப் பெறலாம்.

-அவற்றைப் பின்னர் குடிநுழைவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கவேண்டும்.

-இந்தச் சட்டத்தின் வழியாக அதிகாரிகள் பணக் கடத்தல், பணமோசடிச் சம்பவங்களைக் கண்டறிந்து அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இயலும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்