Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வெளிநாட்டு ஊழியர்களுக்கான கடன் தொகை வரம்பு $500க்குக் குறைப்பு

உரிமம்பெற்ற கடன் வழங்கும் சேவைகளிடமிருந்து குறைந்த வருமானம் ஈட்டும் வெளிநாட்டு ஊழியர்கள் 500 வெள்ளி கடன் மட்டுமே பெறலாம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: சுமார் 1 நிமிடம்)

சிங்கப்பூர்: உரிமம்பெற்ற கடன் வழங்கும் சேவைகளிடமிருந்து குறைந்த வருமானம் ஈட்டும் வெளிநாட்டு ஊழியர்கள் 500 வெள்ளி கடன் மட்டுமே பெறலாம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் $1,500 வரையிலான கடன் தொகை பெறலாம் என்று அறிவிக்கப்பட்ட சில மாதங்களிலேயே புதிய மாற்றங்கள் நடப்புக்கு வந்துள்ளன.

ஆண்டுக்கு 10,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் வெளிநாட்டு ஊழியர்கள், இல்லப் பணிப்பெண்களுக்குப் புதிய விதிமுறைகள் பொருந்தும்.

கடன் வழங்கும் நிறுவனங்கள் வெளிநாட்டவரைக் கடன் உத்தரவாதம் வழங்குபவர்களாக ஏற்றுக்கொள்ளக்கூடாது, குறைந்த வருமானம் ஈட்டும் வெளிநாட்டு ஊழியர்களைத் தங்கள் விளம்பரங்களின் இலக்காக வைத்திருக்கக்கூடாது போன்ற விதிமுறைகளையும் சட்ட அமைச்சு விதித்துள்ளது.

நாளை (ஜூலை 16) முதல் மாற்றங்கள் நடப்புக்கு வரும்.

ஆகஸ்ட் 15 முதல் கடன் வழங்கும் நிறுவனங்கள் 300க்கும் அதிகமான வெளிநாட்டவருக்கு ஒரே நேரத்தில் கடன் கொடுக்க முடியாது.

அத்துடன், வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் மொத்தக் கடன் தொகை 150,000 வெள்ளிக்கு மேல் இருக்கக்கூடாது.

ஓர் ஆண்டில் 50க்கு மேற்பட்ட வெளிநாட்டவருக்குக் கடன் வழங்கக்கூடாது;

மாதத்திற்கு 15 பேருக்கு மேல் கடன் கொடுக்க முடியாது.

கடந்த சில ஆண்டுகளாக, குறைந்த வருமானம் ஈட்டும் வெளிநாட்டு ஊழியர்களிடையே கடன் வாங்கும் பழக்கம் அதிகரித்து வருவது மாற்றங்களுக்குக் காரணம் என சட்ட அமைச்சு தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்