Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

$1.5 மில்லியன் மதிப்பிலான மோசடிகள் - 190 சந்தேக நபர்களிடம் விசாரணை

மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 190 பேரை விசாரித்து வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
$1.5 மில்லியன் மதிப்பிலான மோசடிகள் - 190 சந்தேக நபர்களிடம் விசாரணை

(கோப்புப் படம்: Jeremy Long)

மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 190 பேரை விசாரித்து வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

வர்த்தக விவகாரப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், காவல் அதிகாரிகளுடன் இணைந்து, தீவு முழுவதும் நடத்திய 2 வாரச் சட்ட அமலாக்கச் சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.

அவர்களில் 120 பேர் ஆண்கள், 70 பேர் பெண்கள்.

அவர்கள் 16 வயதுக்கும் 80 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

296 மோசடிச் சம்பவங்களில் அவர்களுக்குத் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் வெள்ளியை இழந்ததாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபர்கள் பண மோசடி, இணையக் காதல் மோசடி, கடன் மோசடி, இணையத்தள வர்த்தக மோசடி ஆகியவை தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறையும் 500,000 வெள்ளி வரை அபராதமும் விதிக்கப்படலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்