Images
  • MYN currency
    படம்:  AFP

போலி மியன்மார் பணநோட்டுகளைக் கையாண்ட நாணயமாற்று வணிகர்கள் மீது விசாரணை

சிங்கப்பூர்க் காவல்துறையினர் போலி மியன்மார் பணநோட்டுகளைக் கையாண்ட 18 நாணயமாற்று வணிகர்கள் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.

யங்கூனில் கடந்த வாரம் இரண்டு சிங்கப்பூரர்கள் போலி மியன்மார் பணநோட்டுகளைப் பயன்படுத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் சிங்கப்பூரில் உள்ள நாணயமாற்று வணிகர் ஒருவரிடருந்து அந்த நோட்டுகளைப் பெற்றதாகத் தெரிவித்தனர்.

அந்த இருவரும் மியன்மாரில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகத்திடமிருந்து உதவி பெற்று வருகின்றனர்.

காவல்துறையினர் 18 நாணயமாற்று வணிகர்களிடம் சோதனை நடத்தினர். 'AG', 'AE' ஆகிய வரிசை எண்களைக் கொண்ட பணநோட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட நோட்டுகள் 10,000 கியாட் மதிப்புக் கொண்டவை.

Top