Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நீண்ட-நாள் பராமரிப்புச் செலவுகளைக் குறைக்கப் புதிய மானியம்

நீண்ட-நாள் பராமரிப்பில் ஈடுபடுவோரின் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் புதிதாக மாதத்திற்கு 200 வெள்ளி மானியம் வழங்கப்படவிருக்கிறது. 

வாசிப்புநேரம் -

நீண்ட-நாள் பராமரிப்பில் ஈடுபடுவோரின் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் புதிதாக மாதத்திற்கு 200 வெள்ளி மானியம் வழங்கப்படவிருக்கிறது.

வீட்டுப் பராமரிப்பு மானியத் திட்டத்தின் கீழ் அது வழங்கப்படும் எனச் சுகாதார அமைச்சுக்கான மூத்த துணையமைச்சர் எட்வின் தோங் இன்று (பிப்பரவரி 13) நாடளுமன்றத்தில் கூறினார்.

அது இவ்வாண்டின் இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிதமான நிரந்தர உடற்குறையுள்ளோரைப் பேணிக்காப்பவர்கள் அந்த மானியத்திற்குத் தகுதி பெறுவர்.

தற்போது நடைமுறையில் இருக்கும் வெளிநாட்டுப் பணிப்பெண் மானியத்திற்குப் பதிலாக புதிய மானியம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

வெளிநாட்டுப் பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்துவதால் ஏற்படும் செலவைச் சமாளிப்பதற்கு மட்டுமே வெளிநாட்டுப் பணிப்பெண் மானியத்தைப் பயன்படுத்த முடியும்.

புதிய மானியத்தின் கீழ் கூடுதல் நீக்குப்போக்குக் கிடைக்கும் என்று கூறப்பட்டது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்