Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் இன்று சிங்கப்பூர் வரவிருக்கிறார்

தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டு இன்று மாலை சிங்கப்பூர் வரவிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் இன்று சிங்கப்பூர் வரவிருக்கிறார்

( படம்: REUTERS/Sergei Karpukhin )

தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டு இன்று மாலை சிங்கப்பூர் வரவிருக்கிறார்.

தமது 4-நாள் இந்தியப் பயணத்தை முடித்துக்கொண்டு அவர் சிங்கப்பூர் வந்துசேர்வார்.

சென்ற ஆண்டு பதவியேற்ற பிறகு முதன்முறையாகத் திரு. மூன் சிங்கப்பூர் வருகிறார்.

தமது 3 நாள் பயணத்தின்போது பிரதமர் லீ சியென் லூங்கை அவர் சந்திப்பார்.

இருதரப்பு உச்சநிலைச் சந்திப்புக்காக 15ஆண்டில் தென் கொரிய அதிபர் ஒருவர் சிங்கப்பூருக்கு வருவது இது முதன்முறை.

இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது, ஆசியான் நாடுகளுடனான தென் கொரியாவின் உறவுகளை வலுப்படுத்துவது ஆகியவை குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடுவர்.

இருதரப்பு மக்களுக்கிடையிலான பரிமாற்றங்கள், வளப்பம், அமைதி ஆகிய அம்சங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்தத் தென் கொரியா இலக்கு கொண்டுள்ளது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்