Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அணுக்கமான கவனிப்பு தேவைப்படுவோருக்கு சமூக சிகிச்சை வசதிகள்- கட்டங்கட்டமாகத் தீவு முழுவதும் அமைக்கப்படும்

அணுக்கமான கவனிப்பு தேவைப்படுவோருக்கு சமூக சிகிச்சை வசதிகள்- கட்டங்கட்டமாகத் தீவு முழுவதும் அமைக்கப்படும்

வாசிப்புநேரம் -
அணுக்கமான கவனிப்பு தேவைப்படுவோருக்கு சமூக சிகிச்சை வசதிகள்- கட்டங்கட்டமாகத் தீவு முழுவதும் அமைக்கப்படும்

(படம்: Jeremy Long)

சிங்கப்பூரில், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட 12 முதல் 69 வயதுடையவர்கள், கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டால், அவர்கள் வீட்டிலேயே குணமடைவது ஏற்புடைய நடைமுறையாக இருக்கும் என்று அமைச்சுகளுக்கிடையிலான பணிக்குழு தெரிவித்துள்ளது.

அந்தப் பிரிவினர், கிருமியால் மோசமாகப் பாதிப்படையும் சாத்தியம் குறைவு என்று குழு கூறியது.

அவர்கள் மருத்துவமனைகளில் கவனிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அது குறிப்பிட்டது.

2 முதல் 11 வயதுடைய நோய்வாய்ப்பட்ட பிள்ளைகளை பெற்றோர் வீட்டில் வைத்துப் பார்த்துக்கொள்ளலாம்.

வீட்டில் குணமடைய, அந்தப் பிள்ளைகள் பொருத்தமானவர்கள் என்பதை மருத்துவமனைகள் முதலில் மதிப்பிட வேண்டும்.

உடல்நலம் சீராக இருந்தும் அணுக்கமான கண்காணிப்பு தேவைப்படுவோர், தகுந்த இடைக்காலப் பராமரிப்பு வசதிகளில் சேர்க்கப்படுவர் என்று பணிக்குழு சொன்னது.

நோய்த்தொற்று அறிகுறிகள் மிதமாக இருந்து, மற்ற சுகாதாரப் பிரச்சினைகளால் அது தீவிரமாகும் சாத்தியம் கொண்டோர், Community Treatment Facilities எனப்படும் சமூக சிகிச்சை வசதிகளில் சேர்க்கப்படுவர்.

அவர்களுக்கு நோயின் அறிகுறிகள் இல்லாமல் இருக்க வேண்டும் அல்லது லேசாக இருக்க வேண்டும்.

அந்த வசதிகள் கட்டங்கட்டமாக தீவு முழுவதும் அமைக்கப்படும்.

சிகிச்சை நிலையங்கள் மருத்துவமனைகளுடன் நெருக்கமாகப் பணியாற்றும். நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படும் நிலை ஏற்பட்டால் அவர்கள் மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுவர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்