Images
  • heng swee keat

சிக்கலான சவால்களுக்குத் தீர்வு காண அதிகமான பொறியியலாளர்கள் தேவை: துணைப் பிரதமர் ஹெங்


பருவநிலை மாற்றம், நிலைத்தன்மை போன்ற சிக்கலான சவால்களுக்குத் தீர்வு காண, சிங்கப்பூருக்கு இன்னும் அதிகமான பொறியியலாளர்கள் தேவை என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் கூறியுள்ளார்.

அதற்கான முயற்சிகளுக்குப் பொதுத்துறை உரிய ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அவர் சொன்னார்.

பிரதமர் அலுவலகத்தின் கீழ், அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் ஆகியவற்றைக் கவனிக்க புதிய அலுவலகம் திறக்கப்படும்.

கட்டமைப்பு, சுற்றுச் சூழல், போக்குவரத்து, எரிசக்தி ஆகியன பற்றி அந்த அலுவலகம் கவனம் செலுத்தும். புத்தாக்கமான யோசனைகளைச் சோதித்துப் பார்க்கும் காப்பகமாகச் சிங்கப்பூரை உருவாக்க அரசாங்கம் பாடுபடும் என்று திரு. ஹெங் கூறினார்.
 

Top