Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வேலை தேடுபவர்களுக்கு உதவ மேலும் 8 நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன

சிங்கப்பூரில் வேலை தேடும் சுமார் 1,300 பேர், ஒரு மாதத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட 8 நிலையங்களிலிருந்து உதவி பெற்றுள்ளனர்.

வாசிப்புநேரம் -
வேலை தேடுபவர்களுக்கு உதவ மேலும் 8 நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன

படம்: Raj Nadarajan

சிங்கப்பூரில் வேலை தேடும் சுமார் 1,300 பேர், ஒரு மாதத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட 8 நிலையங்களிலிருந்து உதவி பெற்றுள்ளனர்.

தோ பாயோவில் இன்று நடைபெற்ற வேலைச் சந்தையில் வெளியுறவு, போக்குவரத்து ஆகிய துறைகளுக்கான மூத்த துணையமைச்சர் சீ ஹொங் டாட் (Chee Hong Tat) அதனைத் தெரிவித்தார்.

அதே போன்று இன்று மேலும் 8 புதிய நிலையங்கள் திறக்கப்பட்டன.

இம்மாத நடுப்பகுதியில் கூடுதலாக 8 நிலையங்கள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு, வேலைத்திறன் கழகமும், SkillsFuture சிங்கப்பூர் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் 400க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் இடம்பெற்றிருந்தன.

அவற்றில் 80 விழுக்காடு கீழ்நிலை ஊழியர்களுக்கானவை.

மற்றவை நிபுணத்துவத் தொழிலர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் ஆகியோருக்கானவை ஆனவை>>.

COVID-19 சூழலில் சில துறைகள் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகின்றன.

மின்-வர்த்தகம், தகவல், தொடர்புத் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் அவற்றுள் அடங்கும்.

அதனால் வேலை தேடுவோர், புதிதாக உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளிலும் அவற்றுக்கு ஏற்ற புதிய திறன்களிலும் கவனம் செலுத்தவேண்டும் என்று திரு. சீ ஹொங் டாட் கேட்டுக்கொண்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்