Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வரவுசெலவுத் திட்டம் 2019: குறைந்த வருமான ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 400 வெள்ளி

குறைந்த வருமானம் பெறும் ஊழியர்கள்,  வேலைநலன் துணை வருமானத் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 400 வெள்ளி வரையிலான உதவித் தொகையைப் பெறுவர்.

வாசிப்புநேரம் -
வரவுசெலவுத் திட்டம் 2019: குறைந்த வருமான ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 400 வெள்ளி

படம்: Gaya Chandramohan

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

குறைந்த வருமானம் பெறும் ஊழியர்கள்,  வேலைநலன் துணை வருமானத் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 400 வெள்ளி வரையிலான உதவித் தொகையைப் பெறுவர்.

அடுத்த ஆண்டு தொடக்கத்திலிருந்து அது நடப்புக்கு வரும்.

வேலைநலன் துணை வருமானத் திட்டத்துக்காக ஆண்டுக்குக் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் வெள்ளி செலவிடப்படும்.

திட்டத்தின் வாயிலாகச் சுமார் 440 ஆயிரம் சிங்கப்பூரர்கள் பயன்பெறுவர் என்று நிதியமைச்சர் கூறினார்.

குறைவான வருமானம் பெறும் குடும்பங்களுக்கான பொதுப் போக்குவரத்துச் செலவைக் குறைப்பதற்கு 10 மில்லியன் வெள்ளி நிதி ஒதுக்கப்படும்.

வயது முதிர்ந்த சிங்கப்பூரர்களை வேலையில் அமர்த்த முதலாளிகளை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் 366 மில்லியன் வெள்ளி நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்யும்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான தேவையைக் குறைப்பதற்கான நடைமுறைகள் அமல்படுத்தப்படும்.

அதன்மூலம் சிங்கப்பூரர்களுக்கான வேலை வாய்ப்புகளைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வது இலக்கு.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்