Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பள்ளிவாசல் நிதியைக் கையாடிய வழக்கு - தீர்ப்பு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு

காமன்வெல்த் அவென்யூ வெஸ்டில் உள்ள தாருஸ்ஸலாம் (Darussalam) பள்ளிவாசலின் முன்னைய தலைவர் அப்துல் முத்தலிப் ஹாஷிம் (Mutalif Hashim) பலருக்கும் உதவியவர் என்று அவருடைய தரப்பு வழக்குரைஞர் கூறியுள்ளார். 

வாசிப்புநேரம் -

காமன்வெல்த் அவென்யூ வெஸ்டில் உள்ள தாருஸ்ஸலாம் (Darussalam) பள்ளிவாசலின் முன்னைய தலைவர் அப்துல் முத்தலிப் ஹாஷிம் (Mutalif Hashim) பலருக்கும் உதவியவர் என்று அவருடைய தரப்பு வழக்குரைஞர் கூறியுள்ளார்.

2006ஆம் ஆண்டுக்கும் 2013ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பள்ளிவாசலில் நன்கொடையாகப் பெற்ற சுமார் 370,000 வெள்ளியை ஏழாண்டு காலமாக அவர் கையாடியதாகக் கூறப்படுகிறது.

58 வயதான முத்தலிப் மீது சுமத்தப்பட்ட நம்பிக்கை மோசடி தொடர்பிலான 6 குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார்.

அவர் மீதான மேலும் 8 குற்றச்சாட்டுகளும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

ஆனால், முத்தலிப் சுமார் 84,000 வெள்ளி வரை வீடில்லாதவர்கள் , பள்ளி மாணவர்கள், வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட பலருக்கும் கொடுத்து உதவியதாக அவருடைய வழக்குரைஞர் கூறினார்.

வித்தியாசமான இந்த வழக்கில் முடிவெடுக்க அவகாசம் தேவை என்பதால், தீர்ப்பை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி கூறினார்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்