Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கூட்டுரிமை வீடுகள் உள்ளிட்ட இடங்களில் கொசுக்களின் இனப்பெருக்கம் பெருமளவு அதிகரிப்பு: தேசியச் சுற்றுப்புற அமைப்பு

சிங்கப்பூரில் இவ்வாண்டு டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை 20,600ஐத் தாண்டியுள்ள நிலையில், தேசியச் சுற்றுப்புற அமைப்பு, தீவிரக் கொசு ஒழிப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

வாசிப்புநேரம் -
கூட்டுரிமை வீடுகள் உள்ளிட்ட இடங்களில் கொசுக்களின் இனப்பெருக்கம் பெருமளவு அதிகரிப்பு: தேசியச் சுற்றுப்புற அமைப்பு

(கோப்புப் படம்: Pixabay)

சிங்கப்பூரில் இவ்வாண்டு டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை 20,600ஐத் தாண்டியுள்ள நிலையில், தேசியச் சுற்றுப்புற அமைப்பு, தீவிரக் கொசு ஒழிப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதிரடித் திட்டம் நடப்பிலிருந்த காலக்கட்டத்தில் ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கம் ஐந்து மடங்கு அதிகரித்துக் காணப்பட்டதாக அமைப்பு தெரிவித்தது.

கூட்டுரிமை வீடுகள் உள்ளிட்ட குடியிருப்புகளிலும் தாழ்வாரங்களிலும் கொசுக்களின் இனப்பெருக்கம் பெருமளவில் அதிகரித்துள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுமுதல் அங்கு குறைவான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றது அமைப்பு.

அதிரடித்திட்டம் முடிவடைந்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்ட தற்போதைய இரண்டாம் கட்டத்தில், பராமரிப்பு மீண்டும் தொடங்கியிருக்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்